தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். இவர் தற்போது ஜீனி, கரேத்தே பாபு மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரவி மோகன் மற்றும் அவர் மனைவி ஆர்த்தியை கடந்த வருடம் செப்டம்பரில் பிரிவதாக அறிக்கை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
அதே நேரத்தில் அவர்கள் விவாகரத்துக்கு பாடகி கெனிஷா என்பவர் தான் காரணம் என்று சர்ச்சை எழுந்தது. அதை அவர்கள் மறுத்தனர்.
இந்த நிலையில் நேற்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண நிகழ்ச்சிக்கு ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக கைகோர்த்து வந்தனர். ஆகையால் அவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப் உறுதியாகி இருக்கிறது.இந்த கல்யாணத்துக்கு வந்த ரவி மோகனையும், கெனிஷாவும் பார்ப்பதற்கு மணமக்களை போல மஞ்சள் நிற பட்டு சட்டை வேட்டியுடனும், பட்டுசேலை அணிந்து வந்திருந்தார்கள்.இருவரும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.இருவரும் ஒன்றாக வந்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகிய நிலையில் தற்போது ஆர்த்தி இன்ஸ்டாவில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில் “ஒரு வருடமாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு நான் எந்த பதிலும் கூறாமல் இருந்தேன். தற்போது உலகம் கூர்ந்து கவனித்து உண்மை வேறு என்பதை தெரிந்துகொண்டிருக்கும் என கூறி இருக்கிறார்.
தன்னை ரவி மோகனின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என மீடியாவிடம் கேட்டிருக்கிறார். சட்டப்படி இன்னும் விவாகரத்து பெறவில்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் ஒரு அப்பாவாக ரவி மோகன் தனது மகன்களை தவிக்கவிட்டு சென்றுவிட்டதாகவும், எந்த பண உதவியும்இருவரும் சேர்ந்து கட்டிய வீட்டை பேங்க் மூலமாக காலி செய்ய வைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.
மேலும் தற்போது பிரபல நடிகைகள் குஷ்பூ மற்றும் ராதிகா ஆகியோர் தங்களது ஆதரவை ஆர்த்திக்கு தெரிவித்து வருகிறார்கள்.