Saturday, May 10, 2025

‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் படத்தில் த்ரிஷா, சிம்பு, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகிற மே 16-ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இசை வெளியீட்டு விழாவை தள்ளிவைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.

இசை வெளியீட்டு விழாவுக்கான புதிய தேதி பின்னர், சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Latest news