Thursday, May 8, 2025

‘HDFC’ யில் கடன் வாங்கியிருக்கீங்களா? இன்ப ஷாக் கொடுத்த வங்கி!

‘HDFC’ வங்கியில் வீட்டுக் கடனோ, வாகனக் கடனோ எடுத்திருக்கீங்களா? அப்படின்னா உங்களுக்கு ஒரு சின்ன இன்ப ஷாக் காத்திருக்குது!

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியாக இருக்கும் HDFC வங்கி, அதன் MCLR வட்டி விகிதத்தை குறைத்திருக்கிறது. இதனால், ஏற்கனவே கடன் வாங்கி வட்டி கட்டிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் Monthly EMI-யில் சிறிய குறைப்பை சந்திக்கப்போறாங்க.

MCLR…அதாவது Marginal Cost of Funds based Lending Rate. இதுதான் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் தரும்போது பின்பற்றும் குறைந்தபட்ச வட்டி விகிதம். இதிலிருந்து தான் வீட்டுக் கடனோ, வாகனக் கடனோ போல ஃப்ளோட்டிங் வட்டி திட்டங்கள் நிர்ணயிக்கப்படுது.

HDFC வங்கி இப்போது 10 முதல் 15 அடிப்படை புள்ளிகள் வரை MCLR விகிதத்தை குறைத்திருக்கிறது. உதாரணமாக, ஒரு வருட கடனுக்கான விகிதம் 9.30% இருந்து 9.15% ஆக குறைந்திருக்கிறது. 6 மாதக் கடன்களுக்கு, 9.30% இருந்து 9.10% ஆக வந்துருக்கிறது

இந்த மாற்றம் மே 7, 2025 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த வட்டி விகித குறைப்பு, சமீபத்தில் ரிசர்வ் வங்கியால் செய்யப்பட்ட ரெப்போ விகிதத் தள்ளுபடியின் தொடர்ச்சியாகவே வந்திருக்கிறது.

இதனால் என்ன நன்மை? என்றால் , வீட்டுக் கடனோ, வாகனக் கடனோ எடுத்திருப்பவர்களுக்கு வட்டி சுமை குறையும். மாத தவணை குறையும். சிலருக்கு கடன் முடியும் காலமும் மாறி வரலாம்.

இது ஒரு பெரிய நிவாரணம் தான். பொருளாதார சுமையை குறைக்க வங்கிகள் எடுத்திருக்கும் இந்த ஸ்டெப், நிச்சயமாக லோன் வாங்கியவர்களுக்கு ஒரு இனிமையான சர்ப்ரைஸ் தான்!

Latest news