Thursday, August 21, 2025
HTML tutorial

நாடே இருளில் மூழ்கப் போகிறது!‘காது’ கிழியப் போகுது !உடனடியாக மக்கள் இதை தான் செய்ய வேண்டும்!

ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்‌காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் பதற்றம் அதிகரிக்கின்ற சூழ்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் மே 7 அன்று நாடெங்கும் மோக் ட்ரில் என்னும் முறையை நடத்த மாநிலங்களுக்கு உத்தரவு அளித்துள்ளது.

இந்த நடைமுறையில் வான்வழி தாக்குதலுக்கு எதிரான அலாரங்கள் ஒலிக்கப்படும், மின்சாரம் துண்டிக்கப்படும், பொதுமக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். இது இந்தியாவின் முக்கியமான  244 “civil defence” மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

இந்த Blackout நடைமுறை என்பது ஒரு ராணுவ உத்தி. எல்லைக்கருகிலுள்ள நகரங்கள், மின் நிலையங்கள், அணைகள், அரசு மற்றும் பாதுகாப்பு கட்டிடங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இரவு முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படும். மக்கள் வீடுகளிலோ, ஜெனரேட்டரில் வந்த ஒளியாலோ வெளிச்சம் காண்பிக்கக் கூடாது. இதனால் எதிரி விமானங்களுக்கு நகரம் தெரியாது, தாக்கும் வாய்ப்பு குறையும்.

இதற்கான வரலாறு இரண்டாம் உலகப்போரிலிருந்தே தொடங்குகிறது. 1942ல் ஜப்பானிய தாக்குதலுக்குப் பிறகு கொல்கத்தாவில் blackout நடைமுறைப்படுத்தப்பட்டது. 1965 மற்றும் 1971ல் பாகிஸ்தானுடன் நடந்த போர்களிலும் பல நகரங்களில் blackout இருந்தது. ஆனால், 1999 கார்கில் போர் நேரடி நகரங்களுக்கு அருகிலில்லாததால் blackout நடைமுறையிலில்லை.

இந்த blackout drills எதற்காக? என்றால் நம்மை பாதுகாக்க தான். ஆனால் இது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடும் – இரவில் வெளிச்சமில்லாமல் இருப்பது பயம், பதட்டம் தரும்.

அப்படியென்றால் மக்கள் என்ன செய்ய வேண்டும்? மோக் ட்ரில் நேரத்தில் அத்தியாவசியமல்லாத அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். ஜெனரேட்டர், இன்வெர்டர் போலி ஒளிகளையும் அணைக்க வேண்டும். அலாரம் ஒலிக்கும்போது பயப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும். அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இந்த பயிற்சிகள் நம் நாட்டின் பாதுகாப்புக்கு தான்.. நாமும் ஒத்துழைத்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும். நாட்டிற்கு ஒரு அச்சுறுத்தல் என்றால் நாம் ஒவ்வொருவரும் ராணுவத்தின் ஒரு பகுதியே!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News