நடப்பு IPL தொடரில் Play Off வாய்ப்பினை இழந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சென்னை மோதியது. சின்னச்சாமி மைதானத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால், ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.
2 ரன் வித்தியாசத்தில் சென்னை தோல்வி அடைந்தாலும் ஆயுஷ் மாத்ரேவின் அதிரடி ஆட்டம், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதனால் தோனி சொன்னபடி 19வது சீசனில், நிச்சயம் CSK Comeback கொடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ருதுராஜ், அஸ்வின், துபே ஆகியோர்களை கழட்டி விட நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாம். இவர்களுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், கேப்டனுமான சஞ்சு சாம்சன் உள்ளிட்ட, சில முன்னணி வீரர்களை டிரேடிங் முறையில் எடுக்க CSK திட்டமிட்டு வருகிறதாம்.
ராஜஸ்தான் அணிக்கும், சஞ்சுவுக்கும் நடுவில் ஏகப்பட்ட மனக்கசப்புகள் உள்ளன. இதனால் அவரை வளைத்துப்போடும் வேலையை சென்னை தொடங்கி இருப்பதாகத் தெரிகிறது.