கொடைக்கானலில் வாகனத்தில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டவாறு சென்ற இளைஞர்களுக்கு, வனத்துறையினர் நூதனமுறையில் தண்டனை வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்களில் புகை பிடிக்கக் கூடாது, சமைக்கக்கூடாது, வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வேனில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டவாறு சென்ற இளைஞர்களுக்கு வனத்துறையினர் நூதனமுறையில் தண்டனை வழங்கினர். அந்த இளைஞர்களை தூய்மை பணியில் ஈடுபடுத்திய வனத்துறையினர், பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வைத்தனர்.