Saturday, May 10, 2025

போப் தோற்றத்தில் அதிபர் டிரம்ப் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த மாதம் ஏப்ரல் 21ம் தேதி காலமானார். இதையடுத்து புதிய போப்பை தேர்வு செய்வதற்கான பணிகளில் வாடிகன் தயாராகி வருகிறது.

இந்த சூழலில் அதிபர் டிரம்பிடம் அடுத்த போப் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் ”நான் போப்பாக இருக்க விரும்புகிறேன். அதுவே என் முதல் தேர்வாக இருக்கும்” என பதிலளித்தார்.

இந்நிலையில் போப் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest news