2025ம் ஆண்டு IPL Play Off ரேஸில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஆளாக வெளியேறியுள்ளது. இதன்மூலம் தொடர்ச்சியாக 2வது முறை Play Off வாய்ப்பினை சென்னை இழந்துள்ளது. ருதுராஜ்க்கு பதிலாக தோனியை மீண்டும் கேப்டனாக கொண்டு வந்தும், அதனால் எந்த பலனுமில்லை.
இதையடுத்து சென்னை அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், ரசிகர்கள் என்று அனைத்து தரப்பினரும், வெளுத்துக்கட்டி விளாசி வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் இந்திய வீரர் R.P. Singhம் இணைந்துள்ளார்.
சென்னை அணி குறித்து அவர், ” CSK இப்படி மோசமாக சொதப்பியதற்கு ரவீந்திர ஜடேஜா, தோனி, மதீஷா பதிரனா மூன்று பேருமே முக்கிய காரணம். ஜடேஜா நீண்டகாலமாக அணியில் இருக்கிறார். தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி, அவர் அதிரடியாக ஆடியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
தோனியால் முன்புபோல பின்வரிசையில் அதிரடி காட்டி ஆடமுடியவில்லை. பதிரனா Wide Ballகளை வாரி வழங்கி விட்டார். இவர்கள் 3 பேரும் பார்மில் இருந்திருந்தால், CSK இப்படி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து இருக்காது,” இவ்வாறு ஓபனாக பேசியிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, மே 3ம் தேதி சின்னசாமி மைதானத்தில் எதிர்கொள்கிறது. CSK, RCBஐ பழி தீர்க்குமா? இல்லை வழக்கம்போல ரசிகர்கள் நெஞ்சில் இடியை இறக்குமா?, என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.