Saturday, May 3, 2025

போதைக்கு அடிமையான காதலி; பிரேக் அப்பில் முடிந்த அஜித்தின் முதல் காதல்.. யாருன்னு தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி Action நடிகராக வலம் வருபவர் அஜித்குமார்.இவருக்கு நடிப்பதை விட கார் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்பது மிகவும் பிடித்தமான ஒன்று..இவர் அண்மையில் பத்ம பூஷண் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..

இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குறையாத காதலுடன் அஜித்தும், ஷாலினியும் இருப்பது பலரும் வியந்து பார்க்கும் விஷயமாகும்.இந்த நிலையில் இன்று அஜித்தின் பிறந்த நாள்.. இந்த நாளினை அஜித் தனது குடும்பத்துடன் மழிசையாக கொண்டாடி வருகிறார்.. இந்த நிலையில் அஜித் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை பதிவிட்டார்.. தற்போது இத புகை படங்கள் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றார்..

இது ஒரு புறம் இருக்க, மறுபக்கம் தற்போது ஒரு நியூஸ் பரவலாக பரவி வருகிறது.. அஜித்தின் முதல் காதல் பற்றி யாரும் பெரிதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது பிரேக் அப்பில் முடிந்த கதையை பற்றி பார்க்கலாம்.

நடிகர் அஜித் ‘என் வீடு என் கணவர்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இவருக்கு முதன்முதலில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றாலே 1996லில் வெளியான காதல் கோட்டை தான்.

அந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீரா நடித்திருந்தார். அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாகவும் மாறியது. காதல் கோட்டை திரைப்படத்துக்கு பிறகு 1999 ஆம் ஆண்டு அஜித்தும், ஹீராவும் தொடரும் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.

அதே நேரத்தில் அஜித் நடிகை ஹீராவை காதலிப்பது கோலிவுட்டுக்கே தெரியும். அந்த சமயத்தில் அஜித் ஹீராவுக்காக பல்வேறு காதல் கடிதங்களை எழுதி இருந்தார். அதில் சில கடிதங்கள் லீக் ஆகிய நிலையில் அந்த கடிதத்தின் மூலம் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் இவர்களின் காதலுக்கு ஹீராவின் அம்மா முட்டுக்கட்டையாக இருந்திருக்கிறார். ஹீரா திருமணம் செய்துகொண்டால் மகளின் கெரியர் குளோஸ் ஆகிவிடும் என அவர் அஞ்சினாராம்.பின்னர் போகப்போக ஹீராவின் பழக்க வழக்கங்கள் அஜித்துக்கு பிடிக்காமல் போனதால் அவர்கள் இருவரும் கடந்த 1998-ம் ஆண்டு பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். அஜித்தே இந்த காதல் முறிவு பற்றி பழைய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறியது, நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது. அவர் ஒரே மாதிரியாக இல்லை. சொல்லப்போனால் அவர் போதைக்கு அடிமையாகிவிட்டார் என தெரிவித்திருந்தார்.

ஹீராவை பிரேக் அப் செய்து பிரிந்த அடுத்த ஆண்டே நடிகை ஷாலினி மீது காதல் வயப்பட்டார் அஜித், 1999ஆம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தின் ஷூட்டிங்கில் ஷாலினியை பார்த்த உடனே அவர் மீது காதலில் விழுந்துவிட்டாராம் . குறிப்பாக அந்த பட ஷூட்டிங்கின் போது ஷாலினியின் கையில் கத்தி பட்டு ரத்தம் வந்ததால் துடிதுடித்துபோன அஜித் அவரை மருத்துவமனையில் அனுமதித்து அக்கறையோடு பார்த்துக்கொண்டாராம். அவரின் இந்த குணத்தால் தான் ஷாலினிக்கு அஜித் மீது காதல் வந்ததாம். அந்த திரைப்படம் முடித்ததும் இருவரும் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அஜித் பத்ம விருதுகள் தினத்தன்று அஜித்-ஷாலினி குறித்து ஹீராவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வைரலாகின்றன எந்தது குகுறிப்பிடத்தக்கது

Latest news