கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக். 21 வயதான இந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரூ.10,000 பந்தயம் கட்டி ஐந்து பாட்டில் மதுபானங்களை தண்ணீர் கலக்காமல் குதித்துள்ளார். இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்தது.
இதையடுத்து கார்த்திக் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கார்த்திக்கிற்கு திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில் அவருக்கு 8 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கார்த்தியின் நண்பர்கள் 6 பேரில் 2 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.