Thursday, May 1, 2025

RR இளம்வீரருக்கு ‘ஜாக்பாட்’ ‘அதிரடி’ காட்டும் BCCI

ஜெய்ப்பூரின் Sawai Mansingh Stadiumல், ஏப்ரல் 28ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய GT 20 ஓவர்கள் முடிவில் 209 ரன்கள் குவித்து அசத்தியது. பின்னர் சேஸிங் செய்த RR வைபவ் சூரியவன்ஷியின் அதிரடியால், 15.5 ஓவரில் இலக்கினை எட்டி மிரட்டியது.

14 வயது வீரர் வைபவ் சூரியவன்ஷி வெறும் 35 பந்துகளில் சதமடித்தது தான், கிரிக்கெட் உலகின் Hot Topic ஆக உள்ளது. இந்தநிலையில் வைபவ்வின் இந்த அதிரடி ஆட்டம், BCCI தரப்பினை வெகுவாக ஈர்த்து விட்டதாம். இதையடுத்து இந்திய அணிக்குள் அவரை கொண்டு வருவதற்கு, முடிவு செய்துள்ளனராம்.

ராஜஸ்தான் அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் மும்பையின் தலைசிறந்த பவுலர்களான பும்ரா, போல்ட், சாஹர் ஆகியோருக்கு எதிராக, வைபவ் எப்படி விளையாடுகிறார் என்று பார்த்து, அதன் அடிப்படையில் அவரை அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளதாம்.

அதாவது இந்த மூவரின் பந்துவீச்சினை வைபவ் எப்படி எதிர்கொள்கிறார். என்பதை வைத்துத்தான் இந்திய அணியில் அவரின் இடம் உறுதி செய்யப்படும். சமீபகாலமாக அபிஷேக் சர்மா சொதப்புவதால், அவருக்கு பதிலாக வைபவ்வினை எடுக்க, BCCI தரப்பு ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.

வைபவ் சதமடித்த அதே ஜெய்ப்பூர் மைதானத்தில் தான் மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. Play Offக்கு செல்ல மும்பையும், தோல்வியைத் தவிர்க்க ராஜஸ்தானும் கடைசிவரை போராடும் என்பதால், இந்த Match ரசிகர்களுக்கு நல்லதொரு Feast ஆக இருக்கக்கூடும்.

Latest news