பிரபல யூட்யூபர் இர்பான், சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கினார். காரிலேயே மனைவியுடன் சென்றார், உணவு, உடைகள், பணம் உள்ளிட்டவற்றை சாலையோர மக்களுக்கு வழங்கினார். ஆனால் அந்த வீடியோவில் அவர் சிலரிடம் கோபமாக பேசியது ரெகார்டு ஆகி,வெளியானது. அதிலேயே அவர் மீதான சர்ச்சை துவங்கியது.
அதற்கு பிறகு சமூக வலைதளங்களில் அவர்மேல் கடும் விமர்சனங்கள் வந்தன. “காருல இருந்து இறங்காமலே உதவி பண்ணுறாரு…”, “பணம் இருக்கு என்பதைக் காட்டுற மாதிரி நடக்கிறார்”ன்னு மக்கள் கடுமையாக விமர்சிச்சாங்க. சிலர் கோபத்தில் அவருடைய சேனலையே ‘unsubscribe’ பண்ண தொடங்கிவிட்டார்கள்.
அவர் நேற்று தான் ஒரு மன்னிப்பு வீடியோ போட்டிருக்கிறார் – “I Was Wrong”ன்னு. அதுல அவர் சொல்வது என்னனா, “என் பேச்சு தவறாக இருக்கலாம், மன்னிக்கவும். உண்மையில் நான்தான் தவறு செய்தேன். ஆனால் என்னை விமர்சித்த வீடியோக்களை நான் பிளாக் செய்யவில்லை, அது ஒரு நிறுவனத்தால் வேண்டுமென்றே பண்ணப்பட்டது,” என கூறியிருக்கிறார்.
ஆனா நெட்டிசன்கள் ஒத்துக்கல. “இவ்வளவு நாள் சும்மா இருந்துட்டு இப்ப வந்து ஏன் மன்னிப்பு கேட்கிறார்?”ன்னு கேக்குறாங்க. காரணம்? அவர் சேனலின் பார்வைகள் கடுமையாக குறைந்திருக்கின்றன. ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் வியூஸ் வந்த இடத்துல இப்ப 15 ஆயிரம், 20 ஆயிரம் வியூஸ் தான். சப்ஸ்கிரைப் பண்ணும் ஆட்களும் குறைஞ்சுட்டாங்க.
அதனால்தான் யாருக்கும் புரியாம சும்மா இருந்த இர்பான், இப்ப திடீர்னு மன்னிப்பு கேட்டிருக்கிறார் என பேசப்பட்டு வருகிறது.