Wednesday, April 30, 2025

பொதுமக்கள் கவனத்திற்கு; மே மாதம் இந்த நாட்களில் வங்கி இயங்காது..? முழு விவரம் இதோ..

வங்கித் தொடர்பான பணிகளுக்காக வங்கி கிளைக்கு செல்லும் நபராக நீங்கள்.. அப்போ இது உங்களுக்குத்தான் . என்னயென்றால் ஏப்ரல் மாதம் இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில்,மே மாத வங்கி விடுமுறை நாட்களின் முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

பொதுவாக இந்தியாவில் வங்கி விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் என்பது அனைவரும் அறிந்தது தான். இதற்கான முக்கிய காரணம் அந்த அந்த மாநிலத்திற்கு தனிப்பட்ட விழாக்கள், கலாச்சாரம் மற்றும் அங்கு கொண்டாடப்படும் பண்டிகைகள் ஆகும். ஆகையால் பிராந்திய அடிப்படையில் இந்த விடுமுறை மாறுகிறது. இதனிடையே மே மாதத்தில் , எந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறையாக இருக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் போலவே இம்முறையும் மே மாதம் தொடங்கும் முன் வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தைப் போலவே, மே மாதத்திலும் அதிக விடுமுறை நாட்கள் உள்ளன. அந்த வகையில் மே மாதம் மொத்தம் எத்தனை நாட்கள் விடுமுறையாக இருக்கும் என்று பார்ப்போம்.

மே 4 அன்று ஞாயிற்றுக்கிழமை என்ற காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.
மே 10- மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்ற காரணமாக வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.
11, 18 ஆகிய நாட்கள் ஞாயிற்றுக்கிழமை என்ற காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.
24 மே 2025 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை காரணமாக வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.
தேதி 25 அன்று ஞாயிற்றுக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.

சரி என்னென்ன நாட்கள் அடைக்கப்பட்டிருக்கும் என்று தெரியுமா?

அதாவது மே 01, 2025 வியாழக்கிழமை மே தினம் என்பதாலும் மகாராஷ்டிரா தினம் என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறையாகும்..
மே 02, வெள்ளிக்கிழமை குரு ரவீந்திரநாத் ஜெயந்தி என்பதால் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.
மே 12, 2025 திங்கட்கிழமை அன்றும் மே 16, 2025 வெள்ளிக்கிழமையும், மே 26, 2025 திங்கள்கிழமையும் வங்களுக்கு விடுமுறையாகும்.

சரி இவ்வளோ நாட்கள் விடுமுறையாக இருக்கு அப்புறம் எப்படி வங்கி வேலைகளை செய்வது என்று யோசிக்கிறீங்களா?
அதற்க்கு தீர்வு இதோ : அதாவது வங்கி தொடர்பான பெரும்பாலான பணிகளை ஆன்லைனிலேயே செய்ய முடியும். இதை ரிசர்வ் வங்கியும் ஊக்குவிக்கிறது. இந்த பணிகளை முடிக்க நீங்கள் வங்கிக் கிளைக்கு செல்ல தேவையில்லை. இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் Net Banking, Mobile Banking மற்றும் வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

Latest news