2026-ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டியை பலப்படுத்தும் பணியில் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். முதல்கட்டமாக கொங்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான மாநாடு கடந்த 26ம் தேதி கோவையில் நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டார்.
இதையடுத்து விஜய் கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அப்போது திடீரென தொண்டர் ஒருவர் பிரச்சார வாகனத்தில் எறி விஜய்க்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அதிரடி கட்டளையிட்டுள்ளார். “நம் இளம் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள், அன்பு கட்டளைகள் சிலவற்றை கூற வேண்டும்.
பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது எனக்கு கவலை அளிக்கிறது.
நான் சொல்வதை நீங்கள் கேட்டு அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்
எல்லாவற்றுக்கும் மேலாக உங்களின் பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்.
நம் அரசியலில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட self disciplineம் இருக்க வேண்டும். நீங்கள் என்மேல் அன்போடு இருப்பது உண்மை எனில் இதுபோல இனி நீங்கள் செய்யக் கூடாது.” என கூறியுள்ளார்.