நடப்பு IPL தொடரில் மோசமான தோல்விகளால் அடிவாங்கிய பிறகு, திடீரென CSK திருந்தி இருக்கிறது. இதையடுத்து அங்கிள்ஸ் அணியாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், தற்போது இளைஞர்கள் படையாக மாறியுள்ளது.
தொடர் தோல்விகளால் ரசிகர்கள் துவண்டு கிடக்கின்றனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக 2026ம் ஆண்டு வலிமையாக Comeback கொடுப்போம் என, தோனியும் உறுதியளித்து உள்ளார். காயம் காரணமாக ருதுராஜ் நடப்பு IPL தொடரில் இருந்து முற்றிலுமாக விலகி இருக்கிறார்.
இந்தநிலையில் CSKவின் அடுத்த கேப்டனாக, ஷிவம் துபேவை நியமிக்க உள்ளதாகத் தகவல்கள் அடிபடுகின்றன. அண்மையில் நடந்த அணி மீட்டிங்கில் இதுகுறித்து தோனி உள்ளிட்ட அனைவரும் விவாதித்து இருக்கின்றனர்.
கேப்டன் பொறுப்பால் ருதுராஜ் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறுகிறார். எனவே துபேவிற்கு கேப்டன் பொறுப்பினை அளித்து, ருதுராஜை வீரராக மட்டும் பயன்படுத்தலாம் என்று, முடிவு செய்துள்ளனராம்.
இதற்கு முன்னோட்டமாக நடப்பு தொடரிலேயே துபேவை சில போட்டிகளுக்கு, கேப்டனாக பயன்படுத்தி பார்க்கவும் சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறதாம். எனவே CSKவில் மீண்டும் ஒரு கேப்டன் மாற்றம் இருக்கலாம் என தெரிகிறது.