நீலகிரி மாவட்டம் நடுவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நள்ளிரவு நேரத்தில் புகுந்த சிறுத்தை, சிறிது நேரம் அங்குமிங்கும் சுற்றிப்பார்த்து விட்டு சென்றுள்ளது.
சிறுத்தை போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்த சம்பவம் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து ஸ்டேஷன் போலீசாரும், இரவு நேரத்தில் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.