Monday, April 28, 2025

விண்வெளியில் இருந்து பூமிக்கு மின்சாரம் எடுக்கும் சீனா! அதற்கான சாத்தியக்கூறுகள் எப்படி தெரியுமா?

ஜப்பான், விண்வெளியில் இருந்து பூமிக்கு சூரிய சக்தியை கதிர்வீச்சு மூலம் அனுப்பும் உலகின் முதல் நாடாக மாறும் திட்டத்தை 2025ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி, ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் JAXA மற்றும் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நாகோக்கி ஷினோஹாராவின் தலைமையில் நடைபெறுகிறது. 2009ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த திட்டம், தற்போது விண்வெளியில் இருந்து மின்சாரத்தை பூமிக்கு அனுப்புவதற்கான முதல் படியாகும்.

இந்த திட்டத்தின் அடிப்படை கருத்து, விண்வெளியில் அமைக்கப்படும் சூரிய பேனல்களை பயன்படுத்தி, சூரிய சக்தியை மைக்ரோவேவ் கதிர்களாக மாற்றி, பூமியில் அமைக்கப்படும் ரெக்டென்னா (rectenna) என்ற சாதனங்களுக்கு அனுப்பி, மின்சாரமாக மாற்றுவதாகும். இதன் மூலம் இரவு நேரம் அல்லது மேகங்கள் இருந்தாலும் கூட 24 மணி நேரமும் சூரிய சக்தியை பெற முடியும்.

2015ஆம் ஆண்டில், JAXA விஞ்ஞானிகள் 50 மீட்டர் தூரத்தில் 1.8 கிலோவாட்டுகள் சக்தியை மின்காந்த கதிர்வீச்சு மூலம் அனுப்பி, மின்சாரமாக மாற்றிய சாதனையை சாதித்தனர். இந்த புதிய முயற்சியில், விண்வெளியில் இருந்து 36,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரெக்டென்னாக்களுக்கு மின்சாரத்தை அனுப்புவதற்கான சோதனை நடைபெற உள்ளது.

இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், உலகின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் புதிய வழி உருவாகும். ஜப்பான், இதன் மூலம் விண்வெளியில் இருந்து மின்சாரத்தை பூமிக்கு அனுப்புவதில் முன்னணி நாடாக மாறும் வாய்ப்பு உள்ளது.

Latest news