OTT தளங்களில் வாரந்தோறூம் திரைப்படங்களும், வெப் தொடர்களும் வெளியாகி வருகிறது. ஓடிடியில் பல ஆங்கில திரைப்படங்களில் காதல் காட்சிகள், நிர்வாண காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
ஓ.டி.டி. மற்றும் சமூக ஊடகங்களில் ஆபாச காட்சிகளுடன், வெப் சீரியல்களை ஒளிபரப்புவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நெட்பிளிக்ஸ், அமேசன் பிரைம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்கள் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது.