Monday, August 18, 2025
HTML tutorial

இப்படி ‘Transaction’ செய்கிறீர்களா? உஷாராக இருங்கள் ! பணம் பறி போய்விடும் …மத்திய அரசு கடும் எச்சரிக்கை!

இப்போது நாம் அனைவரும் தினசரி நேரத்தில் பயன்படுத்தும் ஒரு வசதியாக உள்ளது – பப்ளிக் வைஃபை…. கடைகள், ரயில்வே நிலையங்கள், மெட்ரோ, கஃபே ஷாப்கள், மால்கள் – என எங்கே பார்த்தாலும் இலவச வைஃபை கிடைக்கும். ஆனால், இதை உபயோகிப்பதில் ஒரு பெரிய அபாயம் இருக்கிறது என்று இந்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பப்ளிக் வைஃபை பயன்படுத்தும்போது, உங்களது டேட்டா பாதுகாப்பாக இல்லாமல், ஹேக்கர்கள் அதை எளிதாக திருட முடியும். இந்த வைஃபை நெட்வொர்க்குகள் பெரும்பாலும் பாதுகாப்பற்றதாக இருக்கும், அதனால் உங்களது பர்சனல் தகவல்களான பாஸ்வேர்ட்கள், பேங்க் கணக்கு விபரங்கள், கிரெடிட் கார்ட் விவரங்கள் எல்லாம் எளிதாக ஹேக் செய்யப்படும் அபாயம் உள்ளது.

முதலிலே தெரியாமல் இருக்கும் இந்த அபாயம், உங்கள் ஒவ்வொரு ஆன்லைன் transaction னிலும் பெரும் ரிஸ்க்கை ஏற்படுத்தும். ஹேக்கர்கள் “Man in the middle” அட்டாக், “Session Hijacking”, மற்றும் “Data Sniffing” போன்ற  டெக்னிக்குகளைப் பயன்படுத்தி உங்கள் தகவல்களைத் திருடுகிறார்கள்.

இதனால், பப்ளிக் வைஃபை உபயோகிக்கும்போது சில முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்:

பப்ளிக் வைஃபை பயன்படுத்தும்போது உங்கள் பேங்கிங் செயலிகள், அல்லது பில்கள் கட்டுவது போன்ற சென்ஸிட்டிவ் செயல்களில் ஈடுபடவே கூடாது. அவசியமானால் VPN  பயன்படுத்துங்கள். இது உங்கள் இணைய இணைப்பை encrypt செய்து பாதுகாக்கும். மேலும், உங்கள் அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் Two-Factor Authentication பயன்படுத்துங்கள். இது உங்கள் கணக்குகளை கூடுதல் பாதுகாப்புடன் வைத்திருக்க உதவும்.

உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பை தொடர்ந்து அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். பழைய மென்பொருள்களில் பாதுகாப்பு குறைகள் இருக்கலாம். கூடவே, உங்கள் மொபைல் தானாக வைஃபை கனெக்ட் ஆகும் சிஸ்டத்தை நிறுத்தி வையுங்கள். இதனால், ஹேக்கர்கள் அமைத்த போலி நெட்வொர்க்குகளுடன் இணைக்க முடியாமல் பாதுகாக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News