கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 732 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்ப படிவங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதும், கணவரை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் இடஒதுக்கீடு மூலம் தேர்வு செய்யப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.