Friday, May 9, 2025

ஆந்திராவில் காட்டுயானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஆந்திரர மாநிலம் சித்தூர் மாவட்டம் தாசரிகூடம் கிராமத்தை சேர்ந்தவர் சித்தைய்யா. விவசாயியான இவர் அதிகாலை தனது தோட்டத்திற்கு சென்ற போது, அங்கிருந்த காட்டுயானை அவரை துரத்தியது.

சித்தைய்யாவை விரட்டி சென்ற யானை, அவரை கீழே தள்ளி, தரையில் போட்டு மிதித்து கொன்றது. இதுபோன்ற சம்பவங்களால் அப்பகுதிமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Latest news