பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.
இந்நிலையில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக மோடி அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு முற்றிலும் நியாயமானது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.