Saturday, April 26, 2025

பஹல்காம் தாக்குதல் குறித்து சர்ச்சை பதிவு : பாஜக ஐ.டி விங் மீது வழக்கு

கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வையும், ராகுல் காந்தி மேற்கொண்ட அமெரிக்க பயணத்தையும் குறிப்பிட்டு பாஜக ஐடி பிரிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில் “ராகுல் காந்தி நாட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும், நாட்டிற்குள் ஏதோ ஒரு மோசமான விஷயம் நடக்கிறது” என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவர் சி.எம். தனஞ்சயா அளித்த புகாரின் பேரில், பாஜக ஐடி பிரிவு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Latest news