பொதுவாக பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் ஏற்படுவது இயற்கையான ஒன்றாகும். இருப்பினும், இந்த நேரத்தில் அவர்கள் ஒருவித வலியை எதிகொள்ள நேரிடும். இந்த வலி அவர்களின் மன நிலையைப் பாதிக்கலாம். வலியைப் போக்க பலர் மாத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த வலியை இயற்கையாகவே எப்படி குறைப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக மாதவிடாய் சமயத்தில் தசை பிடிப்புகள் மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படக்கூடிய பிரச்சினைகளாகும்.சில வீட்டில் வைத்திருக்கும் பொருட்களை வைத்து எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் வலியைக் குறைக்கலாம் என்பது பற்றி தெரியுமா?
ஆம்..இஞ்சி தேநீர் முதல் மஞ்சள் நீர் வரை, மாதவிடாய் வலியைப் போக்க அற்புதங்களைச் செய்யும்.
அதாவது மாதவிடாய் காலத்தில் வலி கடுமையாக இருந்தால், நீங்கள் இஞ்சி மற்றும் chamomile tea ஆகியவை குடிக்கலாம். இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இவற்றை தினமும் குடிப்பதால் வலி மற்றும் வீக்கம் குறையும் என்கின்றனர் .
பொதுவாகவே பலருக்கு காஃபி குடிப்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.. மாதவிடாய் காலத்தில் காஃபி குடித்தால் மாதவிடாய் வலிக்கு கேட்கும் என்றால் நம்பமுடிகிறதா ?? ஆம் மாதவிடாய் நேரத்தில் காஃபி உட்கொள்ள வேண்டும் என்கின்றார்.
அது மட்டுமின்றி மாதவிடாய் காலத்தில் மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதாவது கீரை, வாழைப்பழம், பச்சை காய்கறிகள் உடலுக்கு வலிமையைத் தருகின்றன.இவையெல்லாம் பொதுவான கருத்துக்களே ஆகும்