Wednesday, December 17, 2025

“இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்” – பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 5 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வரும் 27ம் தேதிக்குள் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 27ம் தேதிக்கு பிறகு பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கப்படாது என அறிவித்துள்ளது.

இந்தியர்கள் யாரும் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் எனவும், பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என அறிவித்துள்ளது.

Related News

Latest News