Tuesday, December 23, 2025

புது ரேஷன் கார்டு ‘apply’ பண்ணி இருக்கீங்களா? நிறுத்தி வைக்க வாய்ப்பிருக்கு …உடனே இதை செய்யுங்க…!!!

இன்று பலருக்கும் முக்கியமாக தேவைப்படும் ஒன்று – புதிய ரேஷன் கார்டு. ஆனால், விண்ணப்பித்தவுடனே அது உடனே கிடைத்துவிடும் என நினைக்கக் கூடாது. ஏனெனில், இந்த ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் பல்வேறு கட்டங்களை கடந்து தான் பரிசீலிக்கப்படுகின்றன.

ஆனால் ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா? உங்கள் ரேஷன் கார்டு விண்ணப்பம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் வீட்டிலிருந்தே,  ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும்!

முதலில், நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, ஒரு அப்ளிகேஷன் நம்பர் தரப்படும். அந்த நம்பரை வைத்து, tnpublicdistribution.gov.in என்ற tnpds  வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும். அங்கு “New Smart Card Application Status” என்பதை கிளிக் செய்யுங்கள். அங்கே உங்கள் அப்ளிகேஷன் நம்பரை கொடுத்தால், உங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை நெட்டில் நேரில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ரேஷன் கார்டு விண்ணப்பத்தில் மொத்தம் நான்கு முக்கிய கட்டங்களை கடக்க வேண்டும். 

முதலாவதாக, நீங்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். 

அடுத்ததாக, உங்கள் ஆவணங்கள் சரியானதா என்று சரிபார்க்கப்படும். 

மூன்றாவது, துறை அதிகாரிகள் அதை மீண்டும் ஒருமுறை கவனமாக கவனிப்பார்கள். 

இறுதியாக, தாலுக்கா வழங்கல் அதிகாரி ஒப்புதல் தர வேண்டும். இதைத்தான் “Final Approval” என்று சொல்வார்கள். அந்த approval வந்த பிறகுதான், உங்கள் ரேஷன் கார்டு பிரின்ட் செய்யப்படும்.

பலருக்கு ஏன் ரேஷன் கார்டு இன்னும் வரவில்லை என்ற  சந்தேகம் வரும். காரணம், தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்று சில முக்கிய திட்டங்களால், இந்த ஒப்புதல்கள் மெதுவாக நடக்கின்றன. சில சமயங்களில் தற்காலிகமாக நிறுத்தப்படும் வாய்ப்பும் இருக்கின்றது.

Related News

Latest News