Friday, December 26, 2025

“நாடே அழுதுகொண்டிருக்கும் நேரத்தில் விருந்து தேவையா?” – முன்னாள் அதிமுக பிரமுகர் விமர்சனம்

அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு கட்சி எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைத்த நிலையில், “நாடே அழுதுகொண்டிருக்கும் நேரத்தில் விருந்து தேவையா?” என முன்னாள் அதிமுக பிரமுகர் மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தேசத்தையே கண்ணீரில் மூழ்க வைத்த கதறல் ஒலி உலகையே உலுக்கியுள்ள நாளில் முதலமைச்சராக இருந்தவர் இன்று எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் தேசியக்கொடி கட்டிய காரில் பயணிப்பவர் எடப்பாடி தனது விருந்து கொண்டாட்டத்தை தவிர்த்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் அதனை தள்ளி வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related News

Latest News