ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- பஹல்காம் தாக்குதலை அறிந்து அதிர்ச்சியில் மனமுடைந்து போனேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன். இனி யாருக்கும் இப்படியான துயரம் நடக்கக்கடாது. இந்தியா எப்போதும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.