Friday, April 25, 2025

மோடி மற்றும் அமித்ஷாவுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் – சுப்ரமணியன் சுவாமி கருத்து

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வைத்துக்கொண்டு, இனி பாஜக ஆட்சியமைக்க முடியாது. கடந்த கால அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்பட்டதைப் போன்று, இவர்களுக்கும் ஓய்வளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Latest news