காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக காஷ்மீரில் இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கர்கள் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என அந்நாட்டு தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.