Thursday, April 24, 2025

தங்கத்தின் விலை குறைய வாய்ப்பா? அடுத்த 3 மாதங்களில் நடக்கப்போவது என்ன? நிபுணர்கள் என்ன இப்படி சொல்கிறார்கள்?

“இருக்குமோ… ஒரு வேளை இருக்குமோ? தங்கம் விலை குறையக்கூட வாய்ப்பிருக்குமோ?” என்கின்ற எதிர்ப்பார்ப்பு பாரபட்சம் இல்லாமல் எல்லாருக்கும் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஏன்னென்றால் கையில் தங்கம் இருந்தால் எப்பொழுதுமே எல்லா விதத்திலுமே அது உதவியாகவே இருக்கும்.

இந்நிலையில் தற்போது அனைவரின் மனதிலும் ஒரே ஒரு கேள்விதான்… அது என்னவென்றால், தங்கத்தின் விலை இன்னமும் அதிகரித்து எட்டிக்கூட பிடிக்க முடியாத உச்சாணி கிளைக்கு போய்விடுமா அல்லது விலை குறைந்து நடுத்தர மக்களுக்கு நிம்மதி கொடுக்குமா என்பதே. அப்படியே குறைந்தால் எவ்வளவு குறையும்? இதைப்பற்றி அகில இந்திய புல்லியன் சந்தையின் பரேஷ் சவுகான் தெரிவித்துள்ள Points-ஐ பார்க்கலாம்.

இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்து வருகிறது. தங்கத்தின் விலை கடந்த செவ்வாய்க் கிழமை கிட்டத்தட்ட ரூ.75,000-ஐ நெருங்கி எல்லாருக்கும் ஷாக் கொடுத்தது. தற்போதைய சர்வதேச வர்த்தக சந்தையில் தங்கத்தின் விலையால் ஏற்படும் தாக்கம் குறித்து அமெரிக்காவே திக்குமுக்காடிப்போய் உள்ளது என்று சவுகான் கூறியுள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் சீனாவின் அடுத்த பொருளாதார தரவுகள் வெளிவரும் வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை எனவும் சுருக்கமாக சொல்லப்போனால், அடுத்த மூன்று மாதங்களுக்கு தங்கத்தின் விலையில் பெரிய தடாலடியான சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் மிகக் குறைவு எனவும் கூறியிருக்கிறார்.

மட்டுமல்லாமல், மக்கள் அதிகளவில் தங்கம் வாகுகிறார்களே தவிர யாரும் அதை விற்பனை செய்வதில்லை என்பதால் வருமானம் Fixed Deposit அல்லது பங்குகளைப் போல கணக்கிடப்படுவதில்லை. இந்த நிலைமை சிறு முதலீட்டாளர்களுக்கு சற்று சிக்கலானதாக இருக்கலாம். ஒருவர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வாங்கி பின்னர் அதை விற்பனை செய்ய நினைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது தங்கத்திற்கு 3% GST, TDS மற்றும் செய்கூலி கழிக்கப்படும். இதன் காரணமாக, மொத்த மதிப்பில் 95 முதல் 96 சதவீதத்தை மட்டுமே அவர் திரும்பப் பெற முடியும் என்பதால் தங்கத்தை பிற்கால தேவைக்காக வாங்குபவர்கள் தங்க கட்டிகளாகவோ அல்லது நாணயங்களாகவோ வாங்குவது நல்லது என்று கூறுகிறார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை தங்கத்துக்கான முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest news