Monday, December 29, 2025

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து

1996-2001 ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ.3.92 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கிலிருந்து துரைமுருகன் உள்ளிட்டோரை விடுவித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்து சாட்சி விசாரணையைத் துவங்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

Latest News