ஏப்ரல் 22ம் தேதி உத்தர பிரதேசத்தின் Ekana Cricket மைதானத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில், 159 ரன்களை மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து சேஸிங் செய்த டெல்லி வெறும் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து, 161 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ராகுல் முன்னாள் அணியான லக்னோவிற்கு எதிராக அதிரடியாக ஆடி, அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி நல்ல ரன்ரேட்டுடன், பாயிண்ட் டேபிளில் 2வது இடத்தில் இருக்கிறது. இந்தநிலையில் போட்டி முடிந்ததும் லக்னோ உரிமையாளர் கோயங்கா, கேஎல் ராகுலுக்கு தாராளமாக கைகொடுத்து வாழ்த்தினார்.
பின்னர் ராகுலுடன் சகஜமாக பேச கோயங்கா முயற்சி செய்தார். ஆனால் கைகொடுத்ததே பெருசு என்பதுபோல, ராகுல் சடாரென நகர்ந்து சென்று விட்டார். இது கோயங்காவுக்கு முகத்தில் அடித்தது போல ஆகிவிட்டது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, ”இப்போ தான் மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு. நல்ல தரமான செய்கை ராகுல். பழிக்குப்பழி அப்படிங்கிறது இதுதான் போல,” இவ்வாறு விதவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.