Tuesday, April 22, 2025

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் போய் உட்காருவதும் ஒன்றுதான் – நாஞ்சில் சம்பத் பேட்டி

தமிழக முதல்வரின் 72 வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மீண்டும் அடுத்த முதல்வர் 2026 ஸ்டாலின்தான். 2029-ல் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இன்று இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பழனிச்சாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதும், பாடையில் போய் உட்காருவதும் ஒன்றுதான் என பேசியுள்ளார்.

Latest news