Tuesday, April 22, 2025

குழந்தைகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் – சுகாதாரத்துறை அறிவுரை

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் வெயில் அதிகமாக காணப்படும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையில் கர்ப்பிணி பெண்கள். குழந்தைகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதனிடையே நேற்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில். அடுத்த 3 நாட்களுக்கு அதாவது 25ஆம் தேதி வரையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும். நேற்று 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது.

அதன்படி, கரூரில் 103.1 டிகிரி, மதுரை மற்றும் திருச்சியில் 102.3 டிகிரி, சேலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 102.2 டிகிரி, ஈரோடு 101.8 டிகிரி. வேலூர் 101.4 டிகிரி, தர்மபுரி மற்றும் திருத்தணியில் 100.4 டிகிரி என 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news