Tuesday, April 22, 2025

மாநிலங்களவை எம்.பி. ஆகும் அண்ணாமலை?

கடந்த 2021 ஆண்டு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். அவரது செயல்திறனை பா.ஜ.க. தலைமையகம் பாராட்டினாலும், கூட்டணிக் கட்சி அ.தி.மு.க.வில் இருந்து ஏராளமான எதிர்வினைகள் எழுந்தன. கூட்டணி தொடர வேண்டுமெனில் அண்ணாமலையை மாற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டை அ.தி.மு.க. வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து, அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தினார். அதன் பிறகு, பா.ஜ.க. தமிழகத்தின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு அண்ணாமலை தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து பா.ஜ.க. யுவமோர்ச்சா (BJYM) பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது.

Latest news