Sunday, December 28, 2025

உஷாராக இருங்கள்! 500 ரூபாய் போலி நோட்டு புழக்கத்தில் வந்துவிட்டது! அடையாளம் இது தான்!

உங்கள் கையில் 500 ரூபாய் இருக்கிறதா? உஷாராக இருங்கள் அதி போலி நோட்டாக கூட இருக்கலாம்!
மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்ததையடுத்து, புதிய ₹50sss0 மற்றும் ₹2000 நோட்டுகள் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிட்டு வழங்கப்பட்டன.
அந்த நோட்டுகள் போலி நோட்டுகளைத் தடுக்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டன எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய புழக்கத்தில் உள்ள ₹500 நோட்டுகளை ஒத்த வகையில், போலியான நோட்டுகள் சந்தையில் பரவி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய ₹500 போலி நோட்டுகள், உண்மையான நோட்டுகளின் வடிவமைப்பையும், வடிவத்தையும் மிக நெருக்கமாகக் கொண்டு இருப்பதால், பொதுமக்களுக்கு உண்மை மற்றும் போலி நோட்டுகளுக்கிடையே வித்தியாசம் கண்டறிதல் சிக்கலாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம், CBI, DRI, FIU, NIA, SEBI(செபி) உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைப்புகளுக்கும் இதுகுறித்த தகவல்களை அனுப்பியுள்ளது.
மேலும், இது குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலி நோட்டுகள் உயர்தர காகிதத்தில் அச்சிடப்பட்டு இருப்பதால், அவற்றை பார்வைக்கு உண்மையானதாகத் தோன்றும் நிலைமை உருவாகியுள்ளது.
ஆனால், ஒரே ஒரு முக்கிய பிழையின் அடிப்படையில் இந்தக் கள்ள நோட்டுகளை அடையாளம் காண முடியும்.
அதாவது, RESERVE BANK OF INDIA என்ற வாசகத்தில், RESERVE என்ற சொல்லில் உள்ள கடைசி “E” எழுத்திற்குப் பதிலாக “A” என தவறாக அச்சிடப்பட்டுள்ளது.
இதனால், அந்த நோட்டில் RASERVE BANK OF INDIA எனத் தவறாக எழுதப்பட்டுள்ளது.
இந்த சிறிய எழுத்துப் பிழையை கவனமாக பார்க்கும் ஒவ்வொரு முறையும், நம்மை ஏமாற்றப்படுவதிலிருந்து காப்பாற்றும்.

மத்திய அரசு இதுகுறித்து மேலும் தெரிவிக்கும்போது, மக்கள் குறிப்பாக ₹500 நோட்டுகளைப் பெறும் போதெல்லாம், அந்த நோட்டின் எழுத்துகளை சற்று கவனமாகக் கவனிக்க வேண்டியதற்குத் தூண்டுதல் அளித்துள்ளது.
பணப்புழக்கத்தின் அளவைப் பொருத்தவரை, இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ₹13.35 லட்சம் கோடி ரூபாய்கள் circulation-ல் இருந்தன.
அதே பணப்புழக்கம், 2025 ஜனவரி மாதத்தளவில் ₹35.99 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
இதற்கிடையில், ரொக்கப் பணம் இன்னும் பெரிதும் பயன்படுத்தப்படும் சூழ்நிலையில், கள்ள நோட்டுகள் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகவே இதை பார்க்கலாம்.
அதனால், மக்களே – தாங்கள் பெறும் ₹500 நோட்டுகள், குறிப்பாக அதில் உள்ள எழுத்துகளை மிக நன்கு கவனிக்க வேண்டும்.
“RESERVE” என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளதா என சோதனை செய்வது சிறந்த வழியாக இருக்கும்.
இதே போல சந்தேகத்திற்கிடமான எந்த நோட்டும் உங்கள் கையில் வந்தால், அதைப் பற்றி உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இத்தகைய விழிப்புணர்வு, நமது நிதி அமைப்பையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கையையும் பாதுகாக்கும் ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும்.

Related News

Latest News