Tuesday, April 22, 2025

‘SBI’ ல account வச்சுருக்கீங்களா! இந்த வட்டியைக் கேட்டு திடுக்கிடுவீங்க! உஷாராக இருங்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பிக்கைக்குரிய அரசுத் துறையின் வங்கியான எஸ்பிஐ (SBI) புதிய பிக்சட் டெபாசிட் (FD) திட்ட அறிவித்திருக்கிறது.

இந்த திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், இவர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம், சாதாரண மக்களைவிட அதிகமாக இருக்கிறது.

புதிய அறிவிப்பின்படி, மூத்த குடிமக்களுக்கு 4.00% முதல் 7.55% வரை வட்டி வழங்கப்படுகின்றது. இதே விகிதம், சில மாதங்களுக்கு முன்பு அதிகபட்சமாக 7.75% ஆக இருந்தது.

தற்போது, 2 முதல் 3 ஆண்டுகள் காலத்திற்கு FD செய்யும் போது,
சாதாரண மக்களுக்கு 6.90% வட்டியும்,
மூத்த குடிமக்களுக்கு 7.40% வட்டியும் வழங்கப்படுகின்றது.

இந்த மாற்றத்தின் முக்கிய காரணம், ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய ரெப்போ விகிதக் குறைப்பு தான். இதையடுத்து, பல வங்கிகள் தங்களது FD வட்டிவிகிதங்களில் சிறிய மாற்றங்களைச் செய்துள்ளன.

இதன் விளைவாக, முன்பு 2–3 ஆண்டு FD-க்கு மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி கிடைத்தது, தற்போது அது 7.40% ஆகக் குறைந்துள்ளது.

அதன் படி இப்போது நாம் ஒரு எளிய கணக்கைப் பார்ப்போம்:
நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து, எஸ்பிஐ வங்கியில் ரூ.1 லட்சம் FD வைக்கிறீர்கள் எனில்,
3 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்தமாக ரூ.1,24,604 கிடைக்கும்.
இதில், ரூ.24,604 என்பது நிலையான வட்டி.

அதேநேரத்தில், நீங்கள் ஒரு சாதாரண குடிமகனாக இருந்தால்,
அதே FD-க்கு ரூ.1,22,781 கிடைக்கும். இதில், வட்டி ரூ.22,781 ஆகும்.

இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் –
வட்டிவிகிதத்தில் சிறிய குறைப்பு இருந்தாலும், SBI FD திட்டங்கள் இன்னும் பாதுகாப்பானவை, ஏனெனில் இவை அரசாங்க ஆதரவுடன் செயல்படுகின்றன.

பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவும், ஒரு நிலையான வருமானத்தையும் பெறவும் விரும்புகிறீர்களானால், இந்த FD திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.
இது மூத்த குடிமக்களுக்கான ஒரு அற்புதமான வாய்ப்பு! உங்களுக்கான fd யை தேர்வு செய்வதில் உஷாராக இருங்கள்…

Latest news