Monday, April 21, 2025

தங்கம், வெள்ளியெல்லாம் இல்ல! இந்த உலோகம் தான் அடுத்த தங்கம்! உறுதியாக சொல்லும் பிரபல தொழிலதிபர்! அடடா நோட் பண்ணுங்க!

சிலர் என்னடான்னா “தங்கம் வாங்கிப்போடுங்க”-ன்றாங்க… இன்னும் சிலர் “அச்சச்சோ வேண்டவே வேண்டாம். தங்கம் எல்லாம் சுத்த வேஸ்ட்… வெள்ளியில் தான் வருங்காலம்” அப்பிடின்றாங்க… ஆனால் தற்போது இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிரபல தொழிலதிபர் ஒருவர் எந்த உலோகம் அடுத்த தங்கமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து பகிர்ந்துள்ள தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்தக் கருத்துகளை வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் தான் கூறியிருக்கிறார். அதாவது தாமிரத்தின் மதிப்பும் தேவையும் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்ட அனில் அகர்வால், அதை அடுத்த தங்கம் என்று கணித்துளார். உலகின் மிகப் பெரிய தங்க உற்பத்தியாளர்களில் ஒருவரான Barrick கோல்ட் என்ற நிறுவனம் “Barrick” என்று தனது பெயரை மாற்றியுள்ளதை Highlight செய்துள்ள அனில் அகர்வால், இது போதாதா… தாமிரத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்கு என்று கூறியிருக்கிறார்.

இதைப்பற்றி அவர் தனது ட்விட்டர் தளத்தில், “எதிர்காலம் தாமிரம் தான் என்பதை Barrick புரிந்து கொண்டனர். தாமிரம் என்பது புதிய சூப்பர் உலோகம். மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்கட்டமைப்பு, AI மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் என அனைத்து நவீன தொழில்நுட்பங்களிலும் தாமிரம் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது” என்று அவர் பதிவிட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் அனில் அகர்வால் சொல்வது போலவே உண்மையில் தாமிரத்தின் தேவை அதிகரித்தே வருகிறது எனவும் நவீனத் தொழில்நுட்பங்களில் தாமிரத்திற்கான தேவை அதிகரிப்பதே இதற்கு முக்கியமான காரணம் எனவும் வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதனை முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest news