அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
அதிமுக- பாஜக கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலின் பதறுவது ஏன்? பயப்படுவது ஏன்?. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தோம்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் ரத்தாகி இருக்கும் என முதலமைச்சர் கூறுகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது ஏன் நீட் தேர்வை தடுக்கவில்லை. பா.ஜ.க.வுடன் திமுக கூட்டணி வைத்த போது இனித்தது, இப்போது கசக்கிறதா? என்றார்.