Monday, April 21, 2025

சர்க்கரை நோயாளிகள் ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன ஆகும்?

சர்க்கரை நோயாளிகள் ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடு இல்லையென்றாலும், சிறிது அக்கறையுடன் அதை தேர்ந்தெடுத்து, அளவை பின்பற்றுவது அவசியம்.

ஒரு அரை கப் ஐஸ்க்ரீமில் சுமார் 137 கலோரி, 7 கிராம் கொழுப்பு, 16 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 14 கிராம் சர்க்கரை உள்ளது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு தினசரி உணவில் சிறந்த தேர்வாக இருக்காது.

குறைந்த கார்போஹைட்ரேட், சக்கரை, கலோரி மற்றும் கொழுப்பு, அதிக அளவு புரதம் கொண்ட ஐஸ்க்ரீம் வகைகளை தேர்வு செய்ய வேண்டும். உணவு முடிந்த பிறகு ஐஸ்க்ரீம் சாப்பிடுவது சுவையாகவும், சரியான சமநிலையுடனும் இருக்கும். அதே சமயம் அந்த நாளின் மற்ற உணவில் கார்போஹைட்ரேட் அளவை கட்டுப்படுத்துவது சிறந்தது.

ஐஸ்க்ரீமை பரிமாறும்போது பாதாம், பிஸ்தா போன்ற ஆரோக்கியமான பருப்புகளை சேர்க்க வேண்டும். இது சர்க்கரை உயர்வை மெதுவாக்க உதவும். அளவுக்கு மீறிய ஐஸ்க்ரீம் செரிமானத்தையும், ரத்த சர்க்கரையையும் பாதிக்கக் கூடும். ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் நேரங்களில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Latest news