இந்தியா முழுக்க எதிர்பார்த்த ஒரு முக்கியமான அறிவிப்பை BCCI தற்போது வெளியிட்டிருக்கிறது. அது தான் – 2024-25 ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல். இந்திய அணிக்காக விளையாடும் முக்கியமான வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் BCCI ஒப்பந்தம் கொடுக்கும். அந்த ஒப்பந்தங்கள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கும் – A+, A, B, C. இந்த வகைகளுக்கேற்ப, ஒவ்வொரு வீரருக்கும் சம்பளத் தொகையும் வேறுபடும்.
முதலில், A+ கிரேடு… இதில்,இந்திய அணியில் மிக முக்கியமான, ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ச்சியாக ஆடும் வீரர்கள் இதில் இடம்பெறுகிறார்கள். இந்த ஆண்டும், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா – இந்த நான்கு பேரும் A+ பட்டியலில் தொடர்கிறார்கள். இவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு 7 கோடி ரூபாய் சம்பளமாகக் கிடைக்கும்.
அடுத்து, A கிரேடு. இந்த பட்டியலில் இருக்கின்ற வீரர்கள் – முகமது சிராஜ், கேஎல் ராகுல், சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி மற்றும் ரிஷப் பண்ட். கடந்த ஆண்டில் B கிரேடில் இருந்த ரிஷப் பண்ட், இப்போது A கிரேடுக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். அதேபோல், கடந்த வருடம் A கிரேடில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஓய்வு பெற்றதால் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த A கிரேடு வீரர்களுக்கு வருடத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
இப்போ B கிரேடை பார்ப்போம்:
இந்த பட்டியலில் – அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சர்ஃபராஸ் கான் மற்றும் ரஜத் பட்டிதார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். B கிரேடு வீரர்களுக்கு வருடத்திற்கு 3 கோடி ரூபாய் சம்பளமாக பிசிசிஐ வழங்குகிறது. இந்த பட்டியலில் புது முகங்கள் இருப்பது ரசிகர்களுக்கே ஒரு சந்தோஷம்.
அதற்க்குப்பிறகு, C கிரேடு. இதில் – ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா, ராகுல் திரிபாதி, ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் உள்ளனர். C கிரேடு வீரர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 கோடி ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பட்டியலை பார்த்தாலே தெரிகிறது – BCCI இளையதலைமுறையை நன்கு ஊக்குவிக்கிறது. யார் கடுமையாக விளையாடுகிறார்களோ, அவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்குது, பெரிய வாய்ப்புகளும் கிடைக்கும்.