Sunday, April 20, 2025

இனி வந்தே பாரத் ரயிலில் சைவம் தான்; கொண்டுப்போகவும் கூடாது – இந்திய ரயில்வே முடிவு

Vande Bharat Express என்பது இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் ஒரு அரை-அதிவேக ரயில் ஆகும். இது நடுத்தர மற்றும் நீண்ட தூரங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 50 வினாடிகளுக்குள் எட்டும் மேலும் 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது.

இதில் இண்டர்நெட், குளிர்சாதன வசதி, எல்.இ.டி டிவி போன்ற சேவைகளோடு, 24 மணி நேரமும் உணவு குடிநீர் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. அது மட்டுமின்றி கூடுதலாக ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட உள்ளது. இதில் பயணிகள் சாப்பிடுவதற்கு  சைவம் அசைவம் என இருவகை உணவுகள் வழங்கப்படுகிறது.

இதனால் தூய விரதம் இருப்பவர்கள், கோவில்களுக்கு செல்பவர்கள் ரயில்களில் வழங்கப்படும் உணவு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து கத்ரா வரை இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணிகளுக்கு சைவ உணவை மட்டுமே வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அந்த ரயிலின் பேண்டரியில் அசைவ உணவு தயாரிக்க அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர் .அங்கு பணிபுரியும் பணியாளர்களும் சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், பயணிகளுக்கு பிரத்தியேகமாக சைவ உணவை வழங்கும் இந்தியாவின் முதல் ரயில் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் ரயிலில் சிக்கன், மட்டன், மீன், முட்டை உள்ளிட்ட எந்த இறைச்சி வகைகளும், மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு என எந்த அசைவ பொருட்களும் சேர்க்கப்பட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ரயில் ‘சாத்விக்’ சான்றிதழைப் பெற்றுள்ள நிலையில், பக்தர்கள் தூய்மையான மற்றும் சாத்வீக அதாவது சைவ உணவைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது 

Latest news