பரத் நடிப்பில் வெளியான ‘காதல்’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் காதல் சுகுமார். இப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் மீது புகார் எழுந்துள்ளது.
திருமணம் ஆனதை மறைத்து தன்னை திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சுகுமார் மீது மாம்பலம் மகளிர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.