சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடியெடுத்து வைத்த நேரம் சரியில்லை போல. தொடர்ந்து அவரை சர்ச்சைகள் வரிசைகட்டி வருகின்றன. முன்னதாக அவரது யூடியூப் சேனலில், சென்னையில் நூர் அஹமதை எடுத்தது குறித்து, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின், செய்தியாளர் சந்திப்பு வரை சர்ச்சையை ஏற்படுத்த, இனி எங்களது சேனலில் CSK குறித்து பேச மாட்டோம் என்று, அஸ்வின் தரப்பு விளக்கம் அளித்தது. ஆனாலும் இந்த கசப்பால் அஸ்வின் மற்றும் CSK நடுவிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது.
இதற்கு அஸ்வினின் மோசமான பந்துவீச்சும் முக்கியக் காரணமாகும். இந்தநிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்திய யூடியூப் வீடியோவில் அஸ்வின், குழு உறுப்பினர்களுடன் இணைந்து பேசுகிறார். அப்போது Leadership பற்றி பேசும் சக விமர்சகர், ”இதற்கு ராஜஸ்தானின் சஞ்சு சாம்சன், பஞ்சாபின் ஷ்ரேயஸ் அய்யர் மற்றும் சென்னையின் தோனி ஆகியோரை உதாரணமாக கூறலாம்.
தல தோனி எப்படி அடிச்சு ஜெயிச்சு குடுத்தாருன்னு பாத்தீங்களா லாஸ்ட் மேட்ச்,” என்று, பெருமிதமாக பேசுகிறார். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, இடையில் புகுந்த அஸ்வின், ‘ஷ் அவரை பத்தி பேச வேணாம்,” என்று பதறி சிதறினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, இதைப்பார்த்த ரசிகர்கள், ”இவரு கிண்டல் பண்றாரா? இல்லை உண்மையிலேயே பதறுறாரான்னு தெரியலையே,” என, கிண்டல் அடித்து வருகின்றனர்.