சென்னையின் அதிகரித்து வரும் போக்குவரத்து சிக்கல்களை குறைக்கும் நோக்கில், நகராட்சி நிர்வாகம் மின்சார பேருந்துகளின் சேவையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகியஇடங்களில் இருந்து புதிய மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்துகளுக்கான சார்ஜிங் நிலையங்கள் மற்றும் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் இப்போதே தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த மின்சார பேருந்துகள், உடல் நலம் குறைந்தோர், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் என அனைத்து பயணிகளும் வசதியாக ஏறி இறங்கக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக, ஜூன் மாதத்திலேயே 100 மின்சார பேருந்துகளை நகரம் முழுவதும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, அதன் பிறகு இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்குமென போக்குவரத்து துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.