நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி படத்தை முடித்து கொடுத்த கையோடு கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது பெல்ஜியம் ஸ்பா சர்கியூட்டில் இன்று நடைபெறும் ரேஸில் அஜித் குமார் பங்கேற்கிறார்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி மட்டுமே சேதமடைந்துள்ளது. அஜித்துக்கு எந்த காயமும் ஏற்படவில்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.