Sunday, April 20, 2025

மதிமுக பதவியில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடனான மோதலை தொடர்ந்தே விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : மாநில அரசுக்கும் மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணுவதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன்.என்னால் இயக்கத்திற்கோ, பொதுச்செயலாளருக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்துவிட கூடாது என முடிவு செய்துள்ளேன்.

கட்சியை சிதைக்கிற வேலையை ஒருவர் செய்து வருகிறார். அவருக்கு மத்தியில் முதன்மைச் செயலாளராக பணியாற்ற விரும்பவில்லை. மதிமுக முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Latest news