நடிகர் பாபி சிம்ஹாவின் கார் கத்திப்பாரா பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் பாபி சிம்ஹாவின் காரின் முன் பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் அந்த வழியாக பயணம் செய்த 3 பேர் காயமடைந்தனர். 6 பேரின் வாகனங்கள் சேதமடைந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கார் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு சொந்தமானது என தெரிய வந்தது. காரின் ஓட்டுனரிடம் விசாரித்த போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.