Sunday, April 20, 2025

மீண்டும் உயர்கிறது ரீசார்ஜ் கட்டணம்? வாடிக்கையாளர்கள் ஷாக்

இந்தியாவில் பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ஜியோ கடந்தாண்டு ஜுலை மாதம் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்திக்கு ஆளானார்கள்.

இந்நிலையில் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தாண்டு இறுதியில் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Latest news